தமிழ்நாடு

சென்னை அயனாவரத்தில், பெண் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டிய இளைஞர் கைது

தந்தி டிவி

சென்னை அயனாவரத்தில், பெண் மீது ஆசிட் வீசப்போவதாக மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். அயனாவரம் பகுதியில் வசித்து வரும் 21 வயது பெண் ஒருவர், துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த யோகேஷ்குமார் என்கிற விஷால் என்பவரை காதலித்து வந்துள்ளார். யோகேஷ்குமார் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்பதும் சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்ததால், அவருடன் பேசுவதை அந்தப் பெண் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்யாவிட்டால், முகத்தின் மீது ஆசிட் ஊற்றிவிடுவதாக அந்த நபர் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், யோகேஷ்குமார் என்ற விஷாலை போ​லீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்