தமிழ்நாடு

போதையில் பைக் ஓட்டிய இளைஞர்கள்..அதிவேகமாக லாரி மீது மோதிய கார்..நள்ளிரவில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னையில், நள்ளிரவில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்திய இரண்டு இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரும்பாக்கம் 100 அடி சாலையில் வடபழனியை நோக்கி சென்ற ஜெயசூர்யா, பிரவீன் ஆகியோர், மது போதையில் அதிவேகமாக வாகனத்தில் சென்றனர். இதில், கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற கார் மற்றும் லாரி மீது அடுத்தடுத்து மோதினர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வீடு செல்லும் வழியில் விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. வாகனத்தை ஓட்டிய ஜெயசூர்யா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்