தமிழ்நாடு

போலி டிக்கெட்டில் சென்னை விமான நிலையத்தில் நுழைந்த இளைஞர்

சென்னை விமான நிலையத்தில் போலி விமான டிக்கெட்டில் நுழைந்த சீன இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் போலி விமான டிக்கெட்டில் நுழைந்த சீன இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் 4 வது நுழைவு வாயிலில் இருந்து வெளியேற முயன்ற இளைஞர் ஒருவரிடம் பாதுகாப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்பிச் செல்வதாக கூறிய அந்த இளைஞரின், விமான டிக்கெட்டை ஆய்வு செய்தபோது, அது போலியானது என தெரியவந்துள்ளது. அதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அவர் சீனாவை சேர்ந்தவர் என்பதும், ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனியார் காலணி நிறுவனத்தில் பணியாற்றுவதும் தெரிய வந்துள்ளது. தனது காதலியை வழியனுப்ப விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டு, வெளியே வர ஹாங்காங் பயணி போல் போலியான டிக்கெட்டை கொண்டு வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து சீன இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்