தமிழ்நாடு

காதலியை காப்பாற்றும் முயற்சியில் ஆற்றில் வீசப்பட்ட காதலன்

கஞ்சா போதை கும்பலால் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட கல்லூரி மாணவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது

தந்தி டிவி
கஞ்சா போதை கும்பலால் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட கல்லூரி மாணவரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. கல்லூரி மாணவரான ஜீவித் தன் காதலியுடன் திருச்சி கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழ் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு கஞ்சா போதையில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜீவித்தின் காதலியிடம் அத்துமீறியுள்ளது. இந்த மோதலில் ஜீவித் கொள்ளிடம் ஆற்றின் ஆழமான பகுதியில் தூக்கி வீசப்பட்டார். தப்பி ஓடிய அவரின் காதலி கொடுத்த தகவலின் அடிப்படையில் தொடர்ந்து தீயணைப்பு படையினர் 2 ரப்பர் படகுகள் மூலம் ஜீவித்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்