தமிழ்நாடு

மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு - இளைஞர் கொலை

மணப்பாறை அருகே, மது அருந்தும்போது, இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் உறவினர் இருவர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி

மணப்பாறை அருகே, மது அருந்தும்போது, இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் உறவினர் இருவர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே உள்ள ஆனாங்கரைப்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி, கடந்த 28ஆம் தேதி உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். ஆனாங்கரைப்பட்டியைச் சேர்ந்த பொன்னுசாமியின் உறவினர்கள் பழனிவேல், ராமன் ஆகியோர், அவருடன் கடந்த 27ஆம் தேதி மது அருந்தியுள்ளனர். அப்போது தகராறில் அவர்கள் தள்ளி விட்ட போது கீழே விழுந்த பொன்னுசாமியின் தலை மற்றும் நெஞ்சுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. கொலை வழக்காக பதிவு செய்த வையம்பட்டி போலீசார், பழனிவேல் மற்றும் ராமன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்