தமிழ்நாடு

கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை : போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ராமிரெட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் தனது 18 வயது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ராமிரெட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சீனிவாசன் தனது 18 வயது மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சேடப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிவேல் மீது சந்தேகம் உள்ளதாகவும் சீனிவாசன் தெரிவித்ததை அடுத்து, பழனிவேலை போலீசார் விசாரித்தனர். அப்போது சீனிவாசன் மகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக பழனிவேல் ஒப்புக்கொண்டார். அதனைதொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் பழனிவேலை கைது செய்த போலீசார் மகிளா நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாச்சா பலிக்காது.."

CM Stalin | Trichy | "நான் கைக்குழந்தையாக இருந்த போது..இதே திருச்சியில்.." | CM ஸ்டாலின் நெகிழ்ச்சி

Trichy | CM Stalin | கொடியேற்றிவிட்டு மாஸ் என்ட்ரி | CM ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு

BREAKING || உலகுக்கே நல்ல செய்தி... விலை திடீர் சரிவு