தமிழ்நாடு

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இளைஞர் கைது - இளைஞர் காசியின் வழக்கறிஞர் வீட்டில் போலீஸ் சோதனை

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் காசிக்கு நெருக்கமான வழக்கறிஞர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

தந்தி டிவி
சமூக வலைதளங்கள் மூலம் பழகி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக நாகர்கோவிலை சேர்ந்த இளைஞர் காசி மீது பெண் மருத்துவர் புகார் அளித்திருந்தார். அதன்அடிப்படையில், காசியை கைது செய்து போலீசார் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. காசி இளம்பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டி லட்சக்கணக்கான ரூபாய் பறித்தது அம்பலமானது. இந்நிலையில், காசியுடன் தொடர்பு இருப்பதாக கூறி, ஹரி என்ற வழக்கறிஞர் வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஹரி, காசி தொடர்பான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதா என போலீசார் கேட்டதாகவும், இல்லை என கூறியதால் போலீசார் திரும்பி சென்று விட்டதாகவும் தெரிவித்தார். காசி விவகாரத்திற்கும், தமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஹரி தெரிவித்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்ட கல்லூரியில் சேர காசி உதவி கேட்டதாகவும், காசி செய்த தவறுக்கு நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கும் என்றும் வழக்கறிஞர் ஹரி தெரிவித்தார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு