தமிழ்நாடு

+1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள் - மாணவி உயிரிழப்பு

இளைஞர்களை கைது செய்யக்கோரி மாணவியின் பெற்றோர் போராட்டம்

தந்தி டிவி

அரூர் அடுத்த சிட்லிங் மலைகிராமத்தை சேர்ந்த அண்ணாமலை - மலர் தம்பதியின் மகள் சௌமியா பதினென்றாம் வகுப்பு படித்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ரமேஷ் மற்றும் சதிஸ், குடிபோதையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் 2 இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, குழந்தைகள் இல்லத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி மாணவிக்கு உடல்நலம் குன்றியதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, இறந்த மாணவியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு