தமிழ்நாடு

Dindigul | லிப்ட் தருவதாக கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

லிப்ட் தருவதாக கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

thanthitv

#dindigul #thanthitv

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டில் இறக்கி விடுவதாக கூறி இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் சித்திரவேல். திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்ற 25 வயது இளம்பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.பின்னர், சித்துார் குளம் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, இளம்பெண்ணை தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து தப்பிய இளம்பெண், அப்பகுதியினர் உதவியுடன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வடமதுரை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரவேலை கைது செய்தனர்.

Madurai Issue | மதுரையில் சப்பாணி சரவணன் நடுரோட்டில் ஓடஓட விரட்டி படுகொலை

Chennai Latest News| சென்னையில் அறிவிப்பு

Cauvery River | Trichy | திருச்சியில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு

Srirangam | Temple | ஸ்ரீரங்கம் கோயில் நில அபகரிப்பு வழக்கு.. திமுக பிரமுகர் மீது FIR

Chennai | சென்னையின் முக்கிய பகுதியில் கஞ்சா ஆயில் பறிமுதல்.. 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்