#husbandwifefight #Chennailatestnews சென்னை மணலியில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் 6 வயது பெண் குழந்தையை வீட்டில் பூட்டிவிட்டுச் சென்றதாகக் கணவர் மீது புகார் எழுந்துள்ளது. மணலியைச் சேர்ந்த வினோதினி என்பவர் தன்னை மாமனார், மாமியார் தாக்கியதாகவும் தனது கணவர் தன்னையும் தனது குழந்தையையும் வீட்டில் பூட்டிவிட்டுச் சென்றதாகவும், வினோதினி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.