தமிழ்நாடு

மின்சார ரயில் மோதி இளம்பெண் உயிரிழப்பு

தந்தி டிவி

சென்னை மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம் பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விழுப்புரம் மாவட்டம் சாத்தம்பாடி பகுதியை சேர்ந்தவர் முருகன்.

இவரது மகள் ஜானகி (வயது 18). இவர், சென்னையில் தங்கியிருந்து தியாகராய நகரில் உள்ள கடையில் பணியாற்றி வந்தார்.

வழக்கம்போல், பணிக்கு செல்வதற்காக நேற்று புறப்பட்டுள்ளார்.

அப்போது, ஜானகி மாம்பலம் - கோடம்பாக்கம் இடையே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையம் நோக்கி சென்ற மின்சார ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விரைந்து சென்ற மாம்பலம் ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைதொடர்ந்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம் பெண் ரெயில் மோதி உயிரிழந்தாரா? அல்லது வேறேதுவும் காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்