தமிழ்நாடு

குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை முயற்சி - கணவர் குடும்பம் மீது புகார்

thanthitv

சேலத்தில், கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக கூறி இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருப்பூர் அருகே மூங்கில்பாடி பகுதியைச் சேர்ந்த சொர்ணா என்பவருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சொர்ணா, அதிமுக பிரமுகரான மாமனார் கோவிந்தசாமி, மாமியார் உள்ளிட்டோர் சூடு வைத்து சித்ரவதை செய்வதாகவும், கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் தடுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கணவர் வீட்டின் முன்பு சொர்ணா, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், சொர்ணாவுக்கு நியாயம் கேட்டு, அவரது உறவினர்கள் கருப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதை தொடர்ந்து, உரிய ஆவணங்களுடன் புகார் அளித்தால், கணவர் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்