தமிழ்நாடு

ராணிப்பேட்டை அருகே லிவ்-இன் உறவில் இருந்த இளம்பெண் - இளைஞர் தற்கொலை

ராணிப்பேட்டை அருகே லிவ்-இன் உறவில் இருந்த இளம்பெண் - இளைஞர் தற்கொலை

thanthitv

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே, லிவ்-இன் உறவில் இருந்த காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தையான வாலாஜாவை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் காதலாக மாறிய நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஓராண்டுக்கும் மேலாக ஒன்றாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பிரசாந்த் மது அருந்துவது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், இளமபெண் விஷம் அருந்திய தற்கொலை செய்து கொண்ட நிலையில், பிரசாந்தும் தூக்கிட்ட தறகொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து வந்த வாலாஜாப்பேட்டை போலீசார், இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#ranipet #walajah #suicide #thanthitv

BREAKING || சென்னையில் பெரும் சோகம்... பேச்சு மூச்சு இல்லாமல் பிரிந்த இருவர் உயிர்

High Court | HRCE | Sathya Gnana Sabai | வள்ளலார் சபை நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்

BREAKING || நாடே பரபரக்கும் விவகாரம் - சுப்ரீம் கோர்ட் சென்ற ராகுல்

High Court | Police | Anbil Mahesh | அன்பில் மகேஷ் வழக்கில் திடீர் திருப்பம்.. போலீசார் அதிரடி மூவ்

BREAKING || கோவை செல்லும் CM விஜய் - இது லிஸ்ட்லயே இல்லையே... அதிரவிடும் பிளான்