தமிழ்நாடு

சமூகவலைதள பெயர்களில் பட்டாசுகள்-ஆர்வமுடன் வாங்கும் இளைஞர்கள், சிறுவர்கள்

தீபாவளி பண்டிகைக்கு இந்தாண்டு சமூகவலைதள பெயா்களில் விற்பனைக்கு வந்துள்ள பட்டாசுகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தந்தி டிவி

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி என்பது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் பட்டாசு விற்பனையும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இந்நிலையில் இந்தாண்டு சமூக வலைதள பெயா்களில் வந்துள்ள பெயர்கள் வரவேற்பை பெற்றுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஸ்கைப், வாட்ஸ் ஆர்ப், டிவிட்டர், ஜியோ வீல், ஆங்கிரி பர்ட்ஸ் பட்டாசுகளை இளைஞா்கள் மற்றும் சிறுவா்கள் மிகுந்த ஆா்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மேலும் இந்த ஆண்டு சிறுவா்களுக்கு வித விதமான துப்பாக்கி வகைளும் விற்பனைக்கு வந்துள்ளது. இவையும் பெரும் வரவேற்பை பெற்றுதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்