இறந்தும் உயிர் வாழ வைத்த இளைஞர் - குடும்பத்தினர் செய்த நெகிழ்ச்சி செயல் | Organ Donation | Erode
#organdonation #erode #thanthitv
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் - அரசு மரியாதை ஈரோடு மாவட்டம் பவானி அருகே, மூளைச்சாவு அடைந்த பொறியியல் பட்டதாரி இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. வரதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான நிர்மல்குமார், உடற்பயிற்சிக் கூடத்தில் திடீரென மயங்கி விழுந்தார். தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. பலருக்கு மறுவாழ்வு அளித்த நிர்மல்குமாருக்கு, தமிழக அரசு சார்பில் வருவாய் வட்டாட்சியர் கற்பகம் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.