தமிழ்நாடு

மஞ்சள் நிற பேருந்துகள் - இன்று தொடக்கம்

தந்தி டிவி

மஞ்சள் நிறம் தீட்டப்பட்டு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள 100 பேருந்துகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள எட்டு கோட்டங்களில் சேதமடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்படுகின்றன. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்து இயக்கத்தினை இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் சென்னை தீவுத்திடலில் நிறுத்தப்பட்டுள்ள மஞ்சள் நிற பேருந்துகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டார். 

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?