தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளை பரிசோதிப்பதற்காக நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

கொரோனா பரிசோதனை செய்வதற்காக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.5 கோடியே 48 லட்சம் மதிப்பில் மொத்தமாக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வடிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் முதற்கட்டமாக 5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்களை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

5 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் சென்னைக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் கொரோனா பாதித்தவர்களுக்கு சளியின் அளவை கண்டறிய முடியும். அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் பரிசோதனை செய்யலாம் என கூறப்படுகிறது. 2 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா