தமிழ்நாடு

குடிநீர் இன்றி தவித்து வரும் வெள்ளப்பட்டி கிராம மக்கள்...

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராம மக்கள் சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி பெரும் அவதியடைந்து வருவதாக வேதனை.

தந்தி டிவி

தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராம மக்கள், சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி பெரும் அவதியடைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, மோசமாக இருந்த சாலையை செப்பனிட ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. அவை தற்போது கிடப்பில் உள்ளதால், கற்கள் பரப்பிய சாலையில் பயணிக்க முடியாமல் பெரும் அவதியடைந்துள்ளனர். பேருந்து மற்றும் வாகனங்களிலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீரும், சாலையும் இன்றி அவதிப்படும் தங்கள் கோரிக்கைகளை விரைந்து தீர்க்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்