உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, நூற்றுக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கால்களை நனைத்து உற்சாகமடைந்தனர். பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்காலிக நடைமேடை அமைத்து கடல் அலைகளில் கால்களை நனைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா பாடகர் வேல்முருகன், விஜிபி குழுமத்தின் தலைவர் சந்தோஷம், ஏ.ஆர்.ரைஹானா, இயக்குனரும் நடிகருமான சந்தான பாரதி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கடலில் தங்கள் கால்களை நனைத்து உற்சாகமடைந்தனர்.