தமிழ்நாடு

"தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை" - ஸ்டாலின்

வரும் 8 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள தொழிலாளர் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவற்றை பறிப்பதிலேயே மத்திய பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தொழிலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள் உழைக்கும் வர்க்கத்தினர் மீது தொடுக்கப்பட்ட போராகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஆண்டொன்றுக்கு 5 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் பா.ஜ.க.வினர் என்றும், தற்போது ஆண்டுக்கு 2 கோடி பேர் வேலையிழந்து வரும் சூழலை உருவாக்கி உள்ளதாகவும் ஸ்டாலின் சாடியுள்ளார். தொழிலாளர் விரோத பா.ஜ.க. அரசின் நடவடிக்கையால், கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாகவும் பிரிட்டிஷ் அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை மத்திய பா.ஜ.க. அரசு கடைப்பிடிப்பது கவலையளிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி சுமூகத் தீர்வு காண, மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவாருக்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு