தமிழ்நாடு

கடையில் இருந்தவர்களை கட்டி போட்டு லட்சக்கணக்கில் திருடிய கும்பல் - கோவையில் துணிகரம்!

தந்தி டிவி

கோவையில், பழைய இரும்பு குடோன் உரிமையாளரின் சகோதரர் உட்பட இருவரை கட்டிப்போட்டு 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்ற இந்துமக்கள் கட்சி நிர்வாகி உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் முருகன் என்பவர் அவரது சகோதரர் முத்தையாவுடன் இணைந்து பழைய இரும்பு குடோன் ஒன்றை நடத்தி வருகிறார். குடோன் அமைக்க நில உரிமையாளருக்கு 50 லட்சம் ரூபாய் முருகன் வழங்கியதாகவும், ஆனால் அவரின் பெயரில் பதிவு செய்யாததால் குடோன் மூடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு, குடோனில் முத்தையா மற்றும் பேச்சிமுத்து ஆகியோர் உறங்கியபோது, அவர்களை கயிற்றால் கட்டிப்போட்ட மர்மநபர்கள், 6 டன் காப்பர் கம்பிகள் உள்ளிட்ட 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல பொருட்களை எடுத்துச்சென்றனர். புகாரின்பேரில் இந்துமக்கள் கட்சி நிர்வாகி காலணி பிரபு உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் குடோனை வேறொருவருக்கு வழங்க வேண்டி பணம் பெற்று கட்டப்பஞ்சாயத்து செய்ததும், தொடர்ந்து திருட்டு நடைபெற்றதும் தெரியவந்துள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்