தமிழ்நாடு

Chennai | சென்னையில் மூச்சு முட்டி பலியான தொழிலாளர் - உதவி பொறியாளருக்கு வலைவீச்சு

சென்னையில் மூச்சு முட்டி பலியான தொழிலாளர் - உதவி பொறியாளருக்கு வலைவீச்சு

thanthitv

சென்னையில் மூச்சு முட்டி பலியான தொழிலாளர் - உதவி பொறியாளருக்கு வலைவீச்சு சென்னை திருவொற்றியூரில் பாதாள கழிவுநீர் கால்வாய் பணியின்போது மண் சரிந்ததில் தொழிலாளர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவான உதவி பொறியாளரை போலீசார் தேடி வருகின்றனர். பாதாள கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து திருவண்ணாமலையைச் சேர்ந்த பூமிநாதன் என்பவர் உயிரிழந்தார். மீட்பு உபகரணங்கள் எதுவுமில்லாததால் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஒப்பந்ததாரர் ராஜசேகர் மற்றும் மேஸ்திரி செல்வம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்த நிலையில், நேரில் வந்து ஆய்வு செய்யாமல் அலுவலகத்தில் இருந்தபடியே பணியைத் தொடர உத்தரவிட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் அரவிந்த் ராஜா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள உதவி பொறியாளரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Chennai Rain Alert | மிக கனமழை எச்சரிக்கை எதிரொலி.. வேளச்சேரியில் இறங்கிய NDRF

Rain Update | இந்த 8 மாவட்டங்கள் எச்சரிக்கை - ``இன்று மாலை சென்னைக்கு இருக்கு..’’

Chennai Rain Alert | ரூட்டை மாற்றிய இயற்கை - ``சென்னையில் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம்’’

Chennai Rain | கொட்டிய கனமழையில் வீட்டிற்குள் இருந்து கேட்ட அலறல் சத்தம்

Rain Alert | புதுசா கிளம்பியிருக்கு - சென்னையில் எல்லாரும் அலர்ட்டா இருங்கப்பா