விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நக்கணேரி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. 81 வயதுடைய இவர் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். சுமார் 25 வருடம் இந்த தொழிலை செய்து வந்த கருப்பையா தனது மகன் ஓய்வு எடுக்குமாறு கூறியதை அடுத்து மரம் வெட்டும் தொழிலிருந்து ஓய்வு எடுத்தார். தாம் இத்தனை ஆண்டுகள் ஏராளமான மரங்களை வெட்டியதை ஒரு பாவசெயலாக உணரத்துவங்கினார் கருப்பையா...தமது செயலுக்கு பிரயாசித்தம் தேடும் விதமாக ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வருகிறார் கருப்பையா..