தமிழ்நாடு

தலைமுடியை விற்று பசியை போக்கிய தாய் - "நிதி உதவிக்கான ஆணை வழங்கிய ஆட்சியர்" - தந்தி டிவிக்கு நன்றி

சேலம் மாவட்டம், மன்னார்பாளையம் பிரிவு பகுதியில் கணவனை இழந்த நிலையில் தனது 3 குழந்தைகளுடன் பிரேமா என்ற பெண் வசித்து வருகிறார்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம், மன்னார்பாளையம் பிரிவு பகுதியில் கணவனை இழந்த நிலையில் தனது 3 குழந்தைகளுடன் பிரேமா என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில், பசியில் துடித்த குழந்தைகளுக்காக, தனது தலைமுடியை 150 ரூபாய்க்கு விற்று, அவர் பசியை போக்கி உள்ளார். சமூக வலைதளங்கள் வாயிலாக பரவிய இந்த செய்தியால், பிரேமாவுக்கு, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், பண உதவி கிடைத்தது. மேலும், தமிழக அரசு அவருக்கு, மாதந்தோறும் உதவிதொகையாக ஆயிரம் ரூபாய் வழங்க, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதற்கான உத்தரவு ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், பிரேமாவுக்கு, ரேஷன் அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, செய்தி வெளியிட்ட தந்தி டிவிக்கும், பிரேமா நன்றி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்