தமிழ்நாடு

ஆபத்து நேரும் போது ஒலி எழுப்பும் 'நிர்பயா செப்பல்' - ஆபத்தின் போது இனி காலணியும் கைகொடுக்கும்

பெண்களின் பாதுகாப்புக்கு உதவும் வகையிலான கருவி ஒன்றை தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.

தந்தி டிவி

பள்ளி, கல்லூரி, வேலை என பயணிக்கும் பெண்களுக்கு ஆபத்துகள் அதிகம் நடக்கும் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்றாடம் பார்க்கும் செய்திகளே அதற்கு சாட்சி. ஆனால் இதுபோல் பெண்கள் துணிச்சலாக எதையும் எதிர்கொள்ளவும், ஆபத்து காலங்களில் உதவும் வகையிலான கருவி ஒன்றை வடிவமைத்து இருக்கிறார்கள் தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள்

பொறியியல் படிக்கும் சங்கீதா, சவுந்தர்யா, வினோதினி மற்றும் மணிகண்டன் ஆகியோர் ஒன்று சேர்ந்து இந்த கருவியை வடிவமைத்துள்ளனர். கருவி என்றால் பெரிதாக எதையும் கற்பனை செய்ய வேண்டாம்... பெண்கள் அன்றாடம் பயன்படுத்தும் காலணி மற்றும் வாட்ச்சில் ஒரு கையடக்க கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. அவ்வளவே...

பாலியல் ரீதியான பிரச்சினைகள், செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நடக்கும் போது பெண்கள் அவர்களை இந்த காலணியை கொண்டு மிதித்தால் போதும். பெண்களின் உடல் வேகத்திற்கு ஏற்ப இந்தகருவி செயல்பட்டு எதிராளியை தாக்கும் என்கிறார் இந்த கருவியை வடிவமைக்க உதவிய அமிர்த கணேஷ்...

இந்த கருவியை பயன்படுத்துவதும் எளிது என்பதோடு, நடக்கும் போதே ரீசார்ஜ் ஆகக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆபத்து காலங்களில் உள்ள பெண்கள் உதவிக்காக யாரையும் எப்போதும் தேட வேண்டியதில்லை என்கிறார் இதை வடிவமைத்த சங்கீதா.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் கருவிகளும் தற்காப்பு கலைகளும் தேவை என்றாலும் கூட, தனி மனித ஒழுக்கமும் கடுமையான சட்டங்களும் அவசியம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி