தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறையான வேலை வழங்கவில்லை எனக் கூறி 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.