தமிழ்நாடு

சுத்தியலால் தலையில் அடித்து பெண் கொலை- திருமணம் செய்ய மறுத்ததால் கள்ளக்காதலன் வெறிச்செயல்

திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலியை சுத்தியலால் அடித்து கொன்ற காதலன், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
கோவை நேரு நகர் பகுதியை சேர்ந்த திலகவதி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்த பத்மநாபன் என்பவரும் , திலகவதியும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்தனர். பத்மநாபனும் கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வசித்து வருகிறார். இந்த நிலையில், இருவருக்கும் இடையேயான நட்பு கள்ளக்காதலாக மாறியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திலகவதியை, பத்மநாபன் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. திலகவதி தயக்கம் காட்டி வந்ததால், அவர் மீது சந்தேகம் கொண்ட பத்மநாபன், சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திலகவதி மாயமானதாக கூறி, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து, தகரகொட்டாய் என்கிற இடத்தில் இருவரது சடலங்களை போலீசார் மீட்டனர். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி