"தன்னே நன்னே நானே.." தன்னை மறந்து பாட்டு பாடி டான்ஸ் ஆடி நாற்று நட்ட பெண்கள் - ரசிக்க வைக்கும் வீடியோ #Sivaganga #viralvideo #thanthitv சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, வனையனேந்தல் கிராமத்து வயல்வெளிகளில், 15-க்கும் மேற்பட்ட பெண்கள் நாளொன்றுக்கு 3 ஏக்கர் பரப்பளவில் மும்முரமாக நாற்று நடவுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைக் களைப்பை மறந்து பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடி, வயலிலேயே நடனமாடியபடி அவர்கள் மேற்கொள்ளும் இந்த உற்சாக நடவு பணி, கிராமிய பண்பாட்டை பறைசாற்றுகிறது.