தமிழ்நாடு

கள்ளக்காதலனையும் கணவனையும் கொலை செய்ய துப்பாக்கி வாங்கிய பெண் கைது

சென்னையில் கள்ளக்காதலனையும் கணவனையும் கொலை செய்வதற்காக துப்பாக்கி வாங்கிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னை நெசப்பாக்கம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மனைவி மஞ்சுளாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த கார்த்திகேயன் மஞ்சுளாவையும், நாகராஜையும் கண்டித்ததால், அவர்களின்10 வயது மகனை, கடந்த மார்ச் மாதம், நாகராஜ் கொலை செய்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, மஞ்சுளாவை விட்டு கார்த்திகேயன் பிரிந்ததால், அவர் தனியாகவே வசித்து வந்தார். அப்போது, தன்னைக் கைவிட்ட கணவனையும், மகனைக் கொன்ற கள்ளக்காதலனையும் கொலை செய்ய மஞ்சுளா திட்டமிட்டார்.

இது ஒருபுறமிருக்க, சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிரசாந்த் என்பவருடன் மஞ்சுளவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மஞ்சுளா, தனது புதுக் காதலன் பிரஷாந்த் மற்றும் அவனது கூட்டாளி சுதாகரன் ஆகியோருடன் இணைந்து கணவனையும் கள்ளக்காதலனையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

கொலை செய்ய துப்பாக்கி வேண்டுமென்று, அவர்களிடம் இரண்டு லட்ச ரூபாய் பணத்தை மஞ்சுளா கொடுத்துள்ளார்.ஆனால் பிரசாந்த்தும், சுதாகரனும் உண்மையான துப்பாக்கியை வாங்கி கொடுக்காமல் குறைந்த அழுத்தமுடைய, ஏர் கன் எனப்படும் துப்பாக்கியயை மஞ்சுளாவிடம் கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.

இது குறித்து சைதாப்பேட்டை உதவி ஆணையருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி பிரஷாந்த், சுதாகரன், மஞ்சுளா ஆகிய மூவரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் திருவல்லிக்கேணியில் உள்ள கடை ஒன்றில், கள்ளத்துப்பாக்கியை வாங்கியதாக தெரிவித்தனர். சுதாகரன் மீது பள்ளிகரணையில் கொலை வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ளத் துப்பாக்கி வாங்கி கணவனையும் கள்ளகாதலனையும் கொலை செய்ய திட்டமிட்ட மஞ்சுளாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு