காங். தலைமை அலுவலகத்தில் தீக்குளிக்கப் போவதாக பெண் மிரட்டல் - பரபரப்பு
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் அறிவிப்பு தாமதமாகும் நிலையில், அக்கட்சியின் சேவாதளம் அமைப்பு சார்பில் விஜயனுக்கு எம்எல்ஏ சீட் வழங்க கோரி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் டீசல் கேன் எடுத்துக்கொண்டு, சீட் வழங்கவில்லை என்றால் தீக்குளிப்பேன் என மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தினர். இதற்கிடையில், மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும், மேலும் ஹசீனா செயத்திற்கு கிருஷ்ணகிரி தொகுதியை ஒதுக்க வேண்டும் என 30க்கும் மேற்பட்ட பெண்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.