தமிழ்நாடு

மன உளைச்சலால் பெண் விபரீத முடிவு.. செங்கம் அருகே பரபரப்பு

தந்தி டிவி

செங்கம் அருகே கடன் வசூல் செய்ய வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், அவதூறு வார்த்தைகள் பேசி, கைபேசியை பிடுங்கி சென்றதால், மன உளைச்சலடைந்த பெண், தற்கொலை செய்துக்கொண்டார்.

கரிமலைப்பாடி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி வேலாயுதம் மற்றும் பத்மா தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வேலாயுதம் விபத்தில் இறந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது மகள் திருமண செலவிற்காகவும், மகன் படிப்பிற்காகவும் தனியார் நிறுவனத்தில் பத்மா கடன் பெற்றதாக கூறப்படுகிறது. மாதந்தோறும் கட்டப்படும் தவணை ஒரு சில மாதங்களால் தவறியதால், பத்மா வீட்டிற்கு கடந்த 21ஆம் தேதி வந்த இரு நிதி நிறுவனங்களைச் சார்ந்த ஊழியர்கள், அவரை அவதூறாக பேசியுள்ளனர்.

பத்மா வைத்திருந்த கைபேசியை பிடுங்கி சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளாகிய அவர், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

இதற்கு காரணமான தனியார் நிறுவன ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ