தமிழ்நாடு

பிரசவ வலியால் துடித்த பெண் - ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் காவலர்

தந்தி டிவி

திருப்பூரில் பிரசவ வலியால் துடித்த வட மாநில பெண்ணுக்கு ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.திருமுருகன்பூண்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றில் கதறியழுதபடி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் பிரசவத்திற்காக மருத்துவமனை செல்வது தெரியவந்தது. ஆனால் முன்னதாகவே குழந்தை பிரசவமாகவிருந்த சூழலில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் கோகிலா உடனடியாக ஆட்டோவில் ஏறி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதையடுத்து அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து ணெல்லப்பட்டனர். இந்நிலையில் பிரசவம் பார்த்த பெண் காவலரை மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டிய நிலையில், இது குறித்து பேசிய காவலர் கோகிலா தான் ஏற்கனவே படித்த நர்சிங் படிப்பு தனக்கு அந்த நேரத்தில் கைகொடுத்ததாக பெருமிதம் தெரிவித்தார்.

Breaking | TVK Vijay | "எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?" | கொந்தளித்த விஜய்

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்