* தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பெண் எஸ்.பி., தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஐஜி-க்கு எதிராக புகார் அளித்தார்.
* இதனை கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு விசாரித்து வருகிறது.
* இந்நிலையில், இந்த குழுவை மாற்றியமைக்க கோரியும்,
* சம்பந்தப்பட்ட ஐஜியை பணி மாற்றம் செய்து, குற்ற நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
* இந்த மனு நீதிபதி சத்ருகனா புஜாரி முன் விசாரணைக்கு வந்தது.
* அப்போது, ஐஜி தொடர்ந்து அந்த பதவியில் நீடித்தால் சாட்சிகளை கலைக்க கூடும் எனவும்
* இந்த வழக்கில் விசாகா குழுவை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் பெண் அதிகாரி தரப்பில் வாதிடப்பட்டது.
* இதை ஏற்ற நீதிபதி, விசாகா குழுவை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.