Kanniyakumari | Murder | தங்க கம்மலுக்காக பெண் கொடூரமாக கொ*ல
தனியார் விடுதியில் பெண் படுகொலை - நகையுடன் தப்பிய மர்ம நபர் கன்னியாகுமரி அருகே விவேகானந்தபுரத்தில் உள்ள தனியார் விடுதியில், பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது காதில் இருந்த தங்க கம்மல்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திக்காட்டுவிளையைச் சேர்ந்த 51 வயது செல்வி, ஆண் ஒருவருடன் நேற்று காலை விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். மாலையில் அந்த நபர் மட்டும் வெளியே சென்ற நிலையில், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் அறையை திறந்து பார்த்தபோது, செல்வி படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும், செல்வியின் காதில் இருந்த தங்க கம்மல்கள் காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. உடலை மீட்ட போலீசார் உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.