தமிழ்நாடு

பணியில் இருந்து நீக்கியதால் பெண் தற்கொலை முயற்சி

தந்தி டிவி
• சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நீக்கியதால் பெண் துப்புரவு பணியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. • தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆனந்தி என்பவர் துப்புரவு பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தாலுகா அலுவலகத்துக்கு வரும் நபரிடம் சில பணிகளை முடித்து தருவதாக கூறி கையூட்டு வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த துப்புரவு பணியாளர் ஆனந்தி அதிக அளவு தூக்க மாத்திரையை சாப்பிட்டு மயங்கி உள்ளார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டநிலையில், மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை