தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு: தேடப்பட்ட புதுச்சேரி பெண் கைது

சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த புதுச்சேரியை சேர்ந்த பெண், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது புதுச்சேரியை சேர்ந்த மரிய தெரசா என்பவர் வந்தார். இவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது 2016ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் மரிய தெரசா வீட்டில் இருந்து 11 புராதன சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரை தேடி வருவதை அறிந்தனர். உடனே மரிய தெரசாவை கைது செய்த போலீஸார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து அங்கு வந்த கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மரிய தெரசாவை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்