தமிழ்நாடு

மூதாட்டியை தாக்கி 11 பவுன் தங்க நகை கொள்ளை : பெண் கைது...

மூதாட்டியை தாக்கி 11 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 11 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். காரைக்குடி அருகே பள்ளத்தூர் சொர்க்கவாசல் வீதியில் வசித்து வரும் ஆறுமுகம்மாள் என்ற மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த போது, தண்ணீர் கேட்டு உள்ளே நுழைந்த ஒரு பெண் அவரை தாக்கி 11 பவுன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றார். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட வேலூர் மாவட்டதை சேர்ந்த சுந்தரியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 11 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்