சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில், காஜாமைதீன் மற்றும் அவரது கூட்டாளிகளை, தமிழக உளவுப் பிரிவு போலீசார் மற்றும் கர்நாடக, கேரள போலீசார் நாடு முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்களை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து, காஜாமைதீனிடம் நடத்திய விசாரணையில், அவரும், அவரது கூட்டாளிகளும், சுமார் 20 நாட்களுக்கு மேலாக சென்னையில் தங்கியிருந்தது தெரியவந்தது. சென்னை பெரியமேடு பகுதியில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை காஜாமைதீன் வாங்கி சென்றதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.