தமிழ்நாடு

புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை... அரசு பஸ்ஸை மறித்த திக்திக் வீடியோ

புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை... அரசு பஸ்ஸை மறித்த திக்திக் வீடியோ

thanthitv

புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை... சத்தியமங்கலத்தில் அரசு பஸ்ஸை மறித்த திக்திக் வீடியோ சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை, தாளவாடி செல்லும் அரசு பேருந்தை வழிமறித்து, பயணிகள் மற்றும் வனத்துறையினரை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து, கும்டாபுரம் வனப்பகுதி அருகே சென்றபோது யானை சாலையை மறித்ததால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை விரட்ட முயன்றபோது, பேருந்தில் இருந்து இறங்கிய சில பயணிகளும் அங்கு நின்றிருந்தனர். அவர்களை நோக்கி காட்டு யானை திடீரென துரத்தியதால், பயணிகள் அலறியடித்து ஓடி மீண்டும் பேருந்தில் ஏறினர். வனத்துறையினரும் இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர். பின்னர் யானை சாலை ஓரமாக நகர்ந்ததைத் தொடர்ந்து, பேருந்து பாதுகாப்பாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

🔴LIVE : CM Vijay | Chennai | சென்னையில் CM விஜய் - அதிரடி ஆய்வு

Namakkal | தடுப்புகள் மீது ஏறி நின்று போராடிய விவசாயிகள்..

Supreme Court | Manual scavenging | மனிதக் கழிவை கையால் அள்ளும் முறை - உச்சநீதிமன்றம் காட்டம்

BREAKING || காமராஜர் காலை உணவு திட்டம் - தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு

High Court | Irfan | இர்ஃபான்-க்கு இடியை இறக்கிய ஹைகோர்ட் ஆக்‌ஷனில் இறங்கும் அதிகாரிகள்