#Ramanathapuram #wildboar #attack #thanthitv
Ramanathapuram | தொடையில் குத்தி தாக்கிய காட்டுப்பன்றி - சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மரணம்.. ராம்நாட்டில் அதிர்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற சத்துணவு அமைப்பாளர் காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியனேந்தல் பூங்கா நகரைச் சேர்ந்த 56 வயதான காளிமுத்து என்ற பெண் குமரகுடி அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள வயல்வெளி பகுதிக்குச் சென்றபோது, அங்கு வந்த காட்டுப்பன்றி இவரைத் தொடை மற்றும் முழங்கால் பகுதியில் குத்தித் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் காளிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பரமக்குடி தாலுகா காவல்துறையினரும் வனத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.