தமிழ்நாடு

தேர்வில் பிட் அடித்த மனைவி.. கணவரான போலீஸ் SI கைது..

தந்தி டிவி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் முறைகேடு செய்த காவல் உதவி ஆய்வாளர், அவரது மனைவி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு, கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வின்போது, காவல் உதவி ஆய்வாளர் சுமன் என்பவரின் மனைவி லாவண்யா என்பவர் தேர்வில் பங்கேற்று எழுதினார். அப்போது, கேள்வித்தாளை செல்போன் மூலம் படம் எடுத்து, வெளியில் அனுப்பி விடையை கேட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் லாவயண்யா தேர்வில் காபி அடித்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், காபி அடிக்கப்பட்டது உறுதியானதை அடுத்து, தேர்வு எழுதிய லாவண்யா, அவரது கணவர் காவல் உதவி ஆய்வாளர் சுமன் மற்றும் அவலூர்பேட்டை காவல் நிலைய உதவி பயிற்சி ஆய்வாளர் சிவக்குமார்,செங்கம் பகுதியை சேர்ந்த மருத்துவ பிரவீன் ஆகிய 4 ரை போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்