தமிழ்நாடு

கணவரை உயிருடன் புதைத்த மனைவி - கணவர் சொன்னதை தான் செய்ததாக வாக்குமூலம்

கணவரை உயிருடன் புதைத்த மனைவி - கணவர் சொன்னதை தான் செய்ததாக வாக்குமூலம்

தந்தி டிவி

கணவரை உயிருடன் புதைத்த மனைவி - கணவர் சொன்னதை தான் செய்ததாக வாக்குமூலம்

சென்னையில் கணவரை குழியில் போட்டு மனைவியே மூடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் 8 வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். 60 வயதான இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்து வந்தார். கடந்த 17 ஆம் தேதி நாகராஜூக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழக்க போவதாகவும், அதனால் தன்னை கொல்லைப்புறத்தில் உள்ள குழியில் புதைத்து விடுமாறு மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. கணவர் கேட்டுக் கொண்டதன் பேரில் மனைவி லட்சுமியும் அவ்வாறே செய்துள்ளார். இதனிடையே 19ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய மகள் தமிழரசி, தந்தை எங்கே என கேட்டதற்கு நடந்ததை தாய் கூறவே அதிர்ந்து போனார் மகள். உடனே பெரும்பாக்கம் போலீசாரிடம் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரோடு இருந்த நபரை குழியில் போட்டு மூடிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது... அதேநேரம் இது கொலையா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்