தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக மனைவி..டீ குடிக்க சென்ற தந்தை - 2 குழந்தைகளுக்கு நேர்ந்த கதி

தந்தி டிவி

அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக மனைவி..டீ குடிக்க சென்ற தந்தை - 2 குழந்தைகளுக்கு நேர்ந்த கதி

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பார்வையாளர் கூடத்திலிருந்த இரு குழந்தைகள் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.வெங்கசேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மூர்த்தியின் மனைவி காமாட்சி, இரண்டாவது பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூர்த்தியின் 3 வயது குழந்தை சக்திவேல் மற்றும் தனது 6 வயது மகள் சவுந்தர்யா உடன், மூர்த்தியின் அண்ணனான ஏழுமலை, மருத்துவமனைக்கு வந்துள்ளார். மூர்த்தியும் ஏழுமலையும் டீ குடித்துவிட்டு வந்து பார்த்தபோது, பார்வையாளர் கூடத்தில் விட்டுச் சென்ற இரு குழந்தைகளும் மாயமாகி உள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் தேடி குழந்தைகள் கிடைக்காத நிலையில், விஷ்ணு காஞ்சி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக மனைவி..டீ குடிக்க சென்ற தந்தை - 2 குழந்தைகளுக்கு நேர்ந்த கதி

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பார்வையாளர் கூடத்திலிருந்த இரு குழந்தைகள் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.வெங்கசேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மூர்த்தியின் மனைவி காமாட்சி, இரண்டாவது பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூர்த்தியின் 3 வயது குழந்தை சக்திவேல் மற்றும் தனது 6 வயது மகள் சவுந்தர்யா உடன், மூர்த்தியின் அண்ணனான ஏழுமலை, மருத்துவமனைக்கு வந்துள்ளார். மூர்த்தியும் ஏழுமலையும் டீ குடித்துவிட்டு வந்து பார்த்தபோது, பார்வையாளர் கூடத்தில் விட்டுச் சென்ற இரு குழந்தைகளும் மாயமாகி உள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் தேடி குழந்தைகள் கிடைக்காத நிலையில், விஷ்ணு காஞ்சி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.https://youtu.be/VUggqGHM2tw

Vanniarasu | வைரலான மாணவரின் விவகாரம்..புள்ளிவிவரத்தோடு லிஸ்ட் போட்டு அடுக்கிய அமைச்சர் வன்னிஅரசு

Today Gold Rate | ஒரே அடியாக உயர்ந்த தங்கம்..ஷாக்கிங் நியூஸ்

🔴LIVE : முதல்வர்கள் மாநாடு - CM விஜயின் மாஸ் என்ட்ரி.. ஸ்பாட்டை திணறடித்த தொண்டர்கள்

ரங்கசாமி பங்கேற்காத‌து ஏன்? - புதுச்சேரி முதல்வர் அலுவலகம் விளக்கம்

CM Vijay | முதல்வர்கள் மாநாட்டிற்கு செல்லும் வழியில் திடீரென நடுரோட்டில் காரை நிறுத்திய CM விஜய்