45 நாட்களாக நாடகமாடிய மனைவி | பாத்ரூம் டைல்ஸை உடைத்து பார்த்த போலீசாருக்கு ஷாக் கணவனை கொன்று குளியலறையில் புதைத்த மனைவி கைது கணவனை காணவில்லை என 45 நாட்களாக நாடகமாடிய நிலையில் சிக்கினார் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், கணவரைக் கொன்று வீட்டின் குளியலறைக்கு அடியில் புதைத்துவிட்டு, அவர் மாயமானதாக புகார் அளித்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 45 நாட்களாக காணாமல் போனதாக கூறப்பட்ட சுரேந்திர குமார் ஷர்மா குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, மனைவி ரூபியின் வாக்குமூலங்களில் முரண்பாடு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்த குளியலறை தரையை தோண்டியபோது சுரேந்திராவின் உடலை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் கணவரைக் கொன்றதை ரூபி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்கான காரணம் மற்றும் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.