#tiruchendurmurugantemple #tiruchendurmurugan
ஞாயிற்றுக்கிழமை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று பௌர்ணமியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த நிலையில், இன்று காலையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறையும் தொடர்வதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் திருவிழா காலம் போல் காட்சியளித்தன.