தமிழ்நாடு

"CM ஸ்டாலின் ட்வீட்டை ராணுவம் நீக்கியது ஏன்?" - கனிமொழி எம்பி கேள்வி

தந்தி டிவி

தமிழக முதலமைச்சரின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டது குறித்து, கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார். கன்னியாகுமரியைச் சேர்ந்த இக்னீஷியஸ் டெலாஸ் ஃப்ளோரா என்ற பெண்மணி, ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி பெற்றுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண்மணி இந்த பொறுப்பை பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனை, இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்ட் பிரிவின் ட்விட்டர் கணக்கு நீக்கியுள்ளது. இப்பதிவு நீக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் பின்னணி என்ன என்பது குறித்து கனிமொழி எம்பி ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு