#kanniyakumari | #river | #thamirabarani
இரு ஆறுகள் இணையும் அந்த புள்ளி... ஆனந்த தாண்டவம் ஆடும் குமரி தாமிரபரணி கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதையாறு மற்றும் பரளி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இரு ஆறுகளும் இணையும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இரு ஆறுகளும் ஒன்றிணைந்து அதீத நீர்ப்பெருக்குடன் பேரிரைச்சலோடு பாய்ந்து செல்லும் காட்சிகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.