"எங்க.. ஊரையே காணோம்" - காஞ்சியை கட்டிப்போட்ட கடும் பனி #kanchipuram #winter #frost #thanthitv காஞ்சிபுரத்தில் அடர்ந்த பனிமூட்டம் - கடும் குளிர் காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை திடீரென அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. கார்த்திகை மாதத்தில் வழக்கமாக பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில், மார்கழி மாதத்தில் ஏற்படும் பனிப்பொழிவு முன்கூட்டியே தொடங்கியதால் பொதுமக்கள் வியப்படைந்தனர். அடர்ந்த பனிமூட்டம் மற்றும் கடும் குளிரால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களின் காலநிலையை அனுபவிப்பது போல் மகிழ்ந்தனர். affairs,current political news,latest political news