திருச்சி முக்கொம்பு மேலணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 9,200 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் 9 ஆயிரம் கன அடியும், அய்யன் வாய்க்கால் மற்றும் பெருவளை வாய்க்காலில் 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூரில் இருந்து தொடர்ந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால், முக்கொம்பு மேலணைக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#cmvijay #metturdamopen #cauveryopen