#tnpsc #group1exam
குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும், முழுமையான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரத்தில், கூடுதல் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்தார். இதனால் குரூப்-1 தேர்வு எழுதியுள்ள தேர்வர்கள், அடுத்தகட்ட தேர்வு தொடர்பான அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.